குஷ்பு மைக் மோகன் இணையும்.. புதிய படம்..! இயக்குனர் கொடுத்த ஆச்சர்ய தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் மோகனின் திரைப்படத்தில் குஷ்பு அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். 

80-களின் காலகட்டத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் மோகன். இவர் கடந்த 2008ஆம் ஆண்டில் சுட்டபழம் படத்தில் கடைசியாக நடித்தார்.

அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் இருந்ததால் அதன் பிறகு அவர் எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் மோகன் ஹரார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 

விஜயஸ்ரீ இயக்கும் இந்தப் படம் ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தில் மோகனுக்கு ஹீரோயினாக நடிகை குஷ்பு நடிக்க உள்ளதாக இயக்குநர் விஜயஸ்ரீ வந்துள்ளார். இதுவரை மோகனுடன் நடிகை குஷ்பு எந்த படத்திலும் நடித்ததில்லை.

முதல்முறையாக இவர்களது கூட்டணி நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது உடல் எடையை‌ குறைத்த நடிகை குஷ்பு சமீபத்திய நடிகைகளை வியக்கும் அளவிற்கு தனது தோற்றத்தை கவர்ச்சிகரமாக மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kushboo and mohan Haraa movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->