அரசன் வருகிறார்! "கங்குவா" படத்தின் மிரட்டல் போஸ்டருடன் வெளியான அப்டேட்!! - Seithipunal
Seithipunal


சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா "கங்குவா" எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படம் 9ம் நூற்றாண்டில் தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரை தொடர்வது போல் கதை எழுதப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கங்குவா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் Glimpse வீடியோவை நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சற்று முன்னர் புதிய போஸ்டர் உடன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கங்குவா படத்தில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் மற்றவரைப் போன்ற ஒரு போர்வீரன்! வேறு யாரும் இல்லாத அரசன்! அரசன் வருகிறார்!" என புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanguva movie glimpse releasing on July23 Suriya birthday


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->