ஹரிஷ் கல்யாண் பிறந்த நாளில் டீசல் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் கிப்டை பாருங்கள்.! - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டீசல். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடிக்கிறார். இதனை அடங்காதே படத்தை இயக்கிய சண்முகம் முத்துசாமி இயக்குகிறார்.

ஆக்ஷன், ரொமான்ஸ் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஒரு கேங்க்ஸராக நடிக்கிறார். அத்துடன் அதுல்யா ஒரு வழக்கறிஞராக நடித்திருக்கின்றார். இதில் தீனா, வினய், தங்கதுரை உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்

இந்த படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்ய தாமஸ் இசையமைக்கிறார். இதன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அத்துடன் ஹரீஸ் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harish kalyan diesel glimpse video


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->