8 ஆண்டுகளுக்கு பின் கமலுடன் கைகோர்க்கும் பிரபல நடிகை!  - Seithipunal
Seithipunal


மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான 'நாயகன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 

இதனை தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 

ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் இந்த படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ நாளை கமலின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக உள்ளது. 

இதற்கு முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு படத்தின் பெயர் அறிவிக்கப்படும் என ராஜ்கமல் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2015இல் நடிகை திரிஷா 'தூங்காவனம்' என்ற திரைப்படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருந்தார். 

8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஏற்கனவே மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actress join Kamal movie after 8 years


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->