கம் பேக் கொடுக்கும் பிரபல நடிகை! விரைவில் திரையில்... ரசிகர்கள் உற்சாகம்! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரம்பா. தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

நடிகைகளான சிம்ரன், லைலா, ஜோதிகா ஆகியோர் இன்றும் பல முக்கிய படங்களில் நடித்து வருவதால் ரம்பாவுக்கும் நடிப்பின் மீதான ஆசை மீண்டும் வந்துள்ளது. 

இதற்கு முன்னதாக தெலுங்கு படத்தில் வாய்ப்புகள் வந்தாலும் தமிழில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். இவர் 20 ஆண்டுகளில் 100 படங்களுக்கு மேல் நடித்து தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாகவும் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவராகவும் உள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த ரம்பா மீண்டும் திரை உலகில் தன் பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை ரம்பா தெரிவித்திருப்பதாவது, ''திரை உலகில் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் அடையாளமும் புகழும் எனக்கு கிடைத்துள்ளது. அதனை நினைத்து எனக்கு எப்போதும் பெருமை தான். 

நான் நடிக்கும் காலத்தில் மிகவும் ஜாலியாக சுட்டி பெண்ணாக இருந்தேன். திருமணத்திற்கு பிறகு டிவிகளில் சில நிகழ்ச்சிகளில் பணியாற்றினேன். ஆனால் குழந்தைகளுடன் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் நடிப்பை நிறுத்தி விட்டேன். 

எனக்கு 2 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை என அழகான குடும்பம் உள்ளது. ஒரு நடிகையாக நான் எப்போதும் உணர்ந்தவே இல்லை. ஒரு நல்ல அம்மாவாகவும் மனைவியாகவும் இருந்தேன். 

இப்போது குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். இப்போதும் கூட என்னை ரசிகர்கள் ஞாபகம் வைத்து கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக உள்ளது. 

அவர்களது அன்பு தான் மீண்டும் என்னை நடிக்கலாம் என்று எண்ணத்திற்கு தள்ளி உள்ளது. நான் தொடர்ந்து சினிமாவை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சினிமாவின் போக்கு தற்போது மாறி இருக்கிறது. 

ஆனால் சினிமா என்றும் மாறாது. சினிமா நண்பர்கள் உடன் பல விஷயங்கள் பேசிக் கொண்டிருப்பேன். என் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் வித்தியாசமான முறையில் நடிக்க வேண்டும். 

அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம்'' என தெரிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Come back famous actress fans excited


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->