''அரண்மனை 4'' ரிலீஸ் அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.!  - Seithipunal
Seithipunal


சுந்தர் .சி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'அரண்மனை'. திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த திரைப்படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து 'அரண்மனை 2' கடந்த 2016 இல் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. 

பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான  'அரண்மனை 3' கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை அடுத்து சுந்தர்.சி ''அரண்மனை 4'' திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இந்த திரைப்படத்தில் யோகி பாபு, ராசி கண்ணா, தமன்னா, கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aranmanai 4 release update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->