தெரிக்கவிட்ட அஜித்.. தானாக டான்ஸ் ஸ்டெப் ஆடி அசத்திய தல..! - Seithipunal
Seithipunal


"துணிவு" படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மற்றும் பல கோடி வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், ஜி.எம்.சுந்தர், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். 

இப்படத்தினை போனி கபூர் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழக்தில் துணிவு படத்தினை வெளியிட்டுள்ளது.

முதல் நாளே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இத்திரைப்படத்தினை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் விமர்சையாக பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில் அஜித்தின் டான்ஸ் மூவ்ஸ் குறித்து இயக்குனரான வினோத் கூறியுள்ளதாவது, "துணிவு திரைப்படத்தின் முதற்பாதியில் வரும் சில நடனங்களில் அஜித் சாரே ஆசைப்பட்டு ஆடினார். 

கேமராவை வைத்துவிட்டு நீங்க ஆடுங்க சார் என்று கூறிய நிலையில், மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் நடனத்தை அஜித் சாரே ஆசைப்பட்டு ஆடியுள்ளார். மேலும் அதனை அஜித் சார் ஈசியாக செய்துவிட்டார்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amazing Ajith dance step automatically


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->