"காவாலா" பாட்டுக்கு பட்டைய கிளப்பிய அமலாபால் - அதிர்ந்து போன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


"காவாலா" பாட்டுக்கு பட்டைய கிளப்பிய அமலாபால் - அதிர்ந்து போன ரசிகர்கள்.!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸின் கலாநிதி மாறனால் தயாரிக்கப்பட்ட படம் ஜெயிலர். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இந்தப் படத்திலிருந்து வெளியான முதல் பாடலான ‘காவாலா’வுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் நடனம் ஆடி சமூகத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில், நடிகை அமலாபால் மதுபோதையில் இரவு பார்ட்டியில் தனது தோழிகளுடன் அரைகுறை ஆடையில் ‘காவாலா’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த நடன வீடியோவை பார்க்கவே ஆபாசமாக உள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட்டில் திட்டி தீர்த்து வருகின்றனர். 

இதேபோல், இன்னும் சிலர் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் தான் இப்படி எல்லாம் அமலா பால் செய்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress amalapal dance in club


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->