ஒரே படத்தில் 13 கதாபாத்திரங்களில் நடிக்கும் சூர்யா.! - Seithipunal
Seithipunal


அஜித், ரஜினி, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்த 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் சிவா.

இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவருடைய இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். 

அந்த படத்திற்கு "சூர்யா 42" என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இதை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து தயாரிக்கின்றனர். 

நடிகர் சூர்யாவுடன், பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் 3டி தொழில்நுட்ப முறையில் ஒரு சரித்திர படமாக சுமார் பத்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கு  தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். சமீபத்தில், சூர்யா 42 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகை திஷா பத்தானி தெரிவித்திருந்தார். 

தற்போது, இப்படத்தில் நடிகர் சூர்யா பதின்மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை வரும் 2023-ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் முடிப்பதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor surya thirteen charecter at surya 42 movie acting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->