நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் First Look வெளியானது.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் ஜனவரியில் கங்குவா திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்து தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தற்போது கங்குவா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி நள்ளிரவு 12.01 மணிக்கு கங்குவா படத்தின் க்ளைம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பட குழு பிரிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வெளியிட்டுள்ளது. கங்குவா படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "ஒரு போர்வீரன். ஒரு தலைவர். ஒரு அரசன்!" எனக் குறிப்பிட்டு கங்குவா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. அதனை சூர்யாவின் ரசிகர்கள் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Surya Kangua movie first look released


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->