சூரரைப்போற்று அணியுடன் இணையும் நடிகர் சூர்யா.! - Seithipunal
Seithipunal


சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். ஒரு சரித்திர கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு நடிகர் சூர்யாவின் 43வது படம் குறித்து பல செய்திகள் வெளியானது. 

இதற்கு முன்னதாக நடிகர் சூர்யா ‘சூரரைப் போற்று’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சுதா கொங்கரா மற்றும் ஜிவி பிரகாஷூடன் மீண்டும் இணைவேன் என்று தெரிவித்து இருந்த நிலையில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நடிகர் சூர்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "சுதா கொங்கரா இயக்கத்தில் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷின் 100வது படத்தில் இணைவது மகிழ்ச்சி" என்றுத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் நஸ்ரியா, துல்கர் சல்மான், தமன்னாவின் காதலர் விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதையும் உறுதி செய்துள்ளார். 

விஜய் வர்மா சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தின் தலைப்பின் ஒருபகுதியாக ’புறநானூறு’ இருக்கும் என்று இந்த புரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. அதனால், ஒரு வலுவான கதையாக இது இருக்கும் என்பதும் தெரிகிறது. படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor surya announced 43rd movie update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->