தளபதி விஜயுடன் இணையும் பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘கோட்’. இதில் பிரசாந்த் , பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை சமீபத்தில் வெளியான போஸ்டர் வெளிப்படுத்தியது. இதில், ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

சுமார் இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘வசீகரா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக இணைந்து நடித்த சினேகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் மீண்டும் ஜோடியாக  இணைந்துள்ளார். இதுகுறித்த தகவலை சமீபத்திய விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சினேகா பகிர்ந்துகொண்டார்.

அப்போது, பேசிய சினேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா, ‘வாரிசு’ படத்தில் விஜயின் அண்ணியாக நடிக்க சினேகாவுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அதை அப்போது மறுத்துவிட்டார். நான் கூட சரியான முடிவு என்று கூறினேன். அந்த வாய்ப்பை மறுத்ததால்தான் தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு வந்துள்ளது என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sneha joined work vijay


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->