நடிகர் ராம் சரண் திரைப்படத்தின் நியூ அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.!
Actor Ram Charan Movie Update
சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ''கேம் சேஞ்சர்''. இந்த திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் 1000 ஸ்டாண்ட் கலைஞர்கள் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் பாடல் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது, ''ஜரகண்டி பாடல்'' நாளை காலை 9 மணியளவில் வெளியாகும் என படக் குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Actor Ram Charan Movie Update