வெளியானது ரஜினியின் 171-வது படத்தின் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இயக்கத்தில் "வேட்டையன்" படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா ரகுபதி, பஹத் பாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நடிகர் ரஜினியின் 171 வது திரைப்படத்தை கைதி, மாஸ்டர்,விக்ரம், லியோ உள்ளிட்ட மிகப்பெரிய ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு 'தலைவர் 171' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஜினியின் 171-வது படத்தின் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் தலைப்பு அடுத்த மாதம் 22ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor rajini 171 movie poster released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->