சற்று மகிழ்ச்சி தரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்...
Today gold price
தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்ததால் நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தனர்.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 54 ஆயிரத்து 760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 40 குறைந்து ரூ. 6,845க்கு விற்பனை செய்யப்படுகிறது,