எஸ்.பி.கே. நிறுவன அலுவலகங்களில் ஐடி ரைடு!  5 மணி நேரத்தில் 100 கோடி ரூபாய் பறிமுதல்!!  - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது60). அரசு முதல்நிலை ஒப்பந்ததாரரான இவர், பல்வேறு சாலைகள், கட்டிடங்கள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் ஒப்பந்த முறையில் அமைத்துள்ளார்.

தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலம் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் ஒப்பந்தம் எடுத்து பணிகளை செய்து கொண்டுள்ளார்.

இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க பல கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு அருப்புக்கோட்டை மட்டுமின்றி மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கட்டுமான நிறுவன அலுவலகங்கள் உள்ளது.

இன்று காலை 6.30 மணிக்கு அருப்புக்கோட்டையில் உள்ள இவரது வீட்டுக்கு வருமான வரித்துறையினர் கார்களில் வந்து அதிரடியாக நுழைந்தனர். 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

செய்யாத்துரைக்கு சொந்தமான 3 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

அருப்புக்கோட்டை டவுன் காவல் துறை இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிமுருகன், செந்தில் வேலன் மற்றும் காவலர்கள் செய்யாத்துரை வீடு, அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சியில் செய்யாத்துரைக்கு சொந்தமான நூற்பு மில் உள்ளது. அங்கும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் உள்ள எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அந்த நிறுனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதலே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காவலர் பாதுகாப்புடன் நடைபெறும் இந்த சோதனையின்போது ரூ.100 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சோதனை நடப்பதால், சோதனை நிறைவுற்ற பிறகே, முழு விவரமும் வெளியிடப்படும். 

முட்டை கொள்முதல் ஊழல் தொடர்பாக  பல்வேறு இடங்களில் கடந்த வாரம் வருமான வரி சோதனை நடந்த நிலையில் இன்று நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

s p k offices in income tax raid


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->