அமேசான் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்! முடங்கிய இணையதளம்!! - Seithipunal
Seithipunal


ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, அமேசான் இணையதள விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

ஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்களை விற்கும் பிரபல நிறுவனமாக அமேசான் இருக்கிறது. இது பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் "அமேசான் பிரைம் டே"வை அறிமுகம் செய்து உள்ளது. நேற்று முன் தினம் தொடங்கி, 36 மணி நேர சிறப்பு விற்பனை நடைபெற்றுவந்தது. 

இந்த சூழலில் அமேசானில் பணிபுரியும் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆரோக்கியமான பணியிடம், ஊதிய உயர்வு, மருத்துவ உதவி போன்ற கோரிக்கைகளை வைத்துள்ளனர். ஸ்பெயினில் மட்டும் சுமார் 1,800 ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். 

இதனால் விற்பனையும், இணையதளம் முடங்கியது. இதன் காரணமாக "அமேசான் பிரைம் டே" விற்பனை தோல்வியில் முடிந்ததாக கூறுகின்றனர். இதனை அமேசான் நிறுவனம் மறுத்துவிட்டது.

எங்கள் தரப்பில் ஆரோக்கியமான பணியிடம் அளிக்கிறோம். ஊழியர்களின் பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகிறது. எங்கள் ஊழியர்களில் சிலரே போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே "அமேசான் பிரைம் டே" வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக அமேசான் நிறுவனம் கூறியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amazon employees strike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->