இனிமேல் நீ அவருடைய பேச்சைத்தான் கேட்க வேண்டும்.!! தினகரனுக்கு அதிரடி கட்டளையிட்ட சசிகலா? யார் அந்த நபர்? - Seithipunal
Seithipunal

தனது கணவரை பார்க்க ஐந்து நாள் பரோலில் சசிகலா வந்திருந்தார். அவரது பரோல் முடிவடைந்ததால், இன்று கர்நாடக சிறைக்கு சசிகலா திரும்பியுள்ளார். 5 நாட்கள் பரோலில் வந்த சசிகலாவிற்கு, தனது குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பதற்கே நேரம் சரியாக இருந்தது என்று கூறப்படுகிறது. சசிகலாவின் தம்பி திவாகரனும், சசிகலாவின் அக்கா மகன் தினகரனும் ஒருவரை ஒருவர், மாறி மாறி குற்றஞ்சாட்டி உள்ளனர். தினகரன் மற்றும் திவாகரன் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தீர்த்து வைக்க முடியாததால் சசிகலா விரக்தி அடைந்திருக்கிறார். இந்த நிலையில், கடைசியாக நேற்று இரவு தினகரனை சந்தித்த சசிகலா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார். சிறை வாழ்க்கை என்பது கொடுமையான விஷயம். அதிலும் பெண்கள் சிறையில் இருப்பது அவர்களுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய தண்டனை. தற்போது எனக்கும் இளவரசிக்கும் ஏற்பட்டுள்ள நிலைமை வருத்தத்துக்குரியது. எனக்கு பரோல் முடிந்து விட்டது. ஜெயிலுக்கு போவதை நினைத்தால், என்னுடைய நெஞ்சு பகீர் என்கிறது. இந்த சூழ்நிலையில், கட்சியை உன்னிடம் கொடுத்து நடத்த சொன்னால், அதை உன்னால் சரியாக செய்ய முடியவில்லை. கட்சிதான் எனக்கு முக்கியம். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் "சரியாக முடிவெடுக்கும் திறமையும், ஆலோசனை சொல்லும் ஒரே நபர் யார் என்றால் அது எனது கணவர் நடராஜன் மட்டும்தான்". அதனால், அவர் உடல் நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம். அது வரைக்கும் பொறுமையாக இருக்கவேண்டும் என்று தினகரனிடம் சசிகலா உருக்கமாக பேசியிருக்கிறாராம். ஆனால், அதனை ஏற்க தினகரன் தரப்பு மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

தவறாமல் இதையும் படிச்சுருங்க..!! 

செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும் செய்தாகிவிட்டது.!! அதிகாலை 2 மணி நேரம் சசிகலா வீட்டில் நடந்தது என்ன?

Advertisement


Get Newsletter

Seithipunal