சகோதரனை கொலை செய்த காவல் அதிகாரியை கட்டித்தழுவிய சகோதரர்.! நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் தன் சகோதரனை கொன்ற பெண் காவலரை இளைஞர் ஒருவர் மன்னித்து, நீதிமன்றத்தில் ஆரத்தழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

அமெரிக்காவின் டல்லாஸ் எனும் மாவட்டத்தில் வாழ்ந்து வந்த ஆம்பர் கைகெர் என்னும் பெண் காவலர் ஒருவர், சென்ற ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி, அவரின் வீட்டின் அருகில் 4வது தளத்தில் வசித்து வந்த கருப்பினத்தை சேர்ந்த போதம் ஜீன் என்ற இளைஞரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

இது கருப்பினத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று சொல்லி  அந்த நாட்டில் போராட்டம் புயலென கிளம்பியது. ஆனால் இதை மறுத்துள்ள ஆம்பர் கைகெர், சம்பவம் நடந்த அன்று தனது வீட்டுக்குள் ஜீன் கொள்ளையில் ஈடுபட முயன்றதாக எண்ணி, தற்காப்புக்காக ஜீனை கொலை செய்ததாக தெரிவித்தார்.

இது குறித்து வழக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இதில் ஆம்பர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை இதை தொடர்ந்து, அவருக்கு 5 முதல் 99 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தனர். மேலும் ஆம்பர் கைகருக்கு குறைந்தது 28 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று ஜீன் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், வழக்கின் இறுதி தீர்ப்பு டல்லாஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி டாம்மி கெம்ப் முன் விசாரணை நடந்தது. அப்போது குற்றவாளியான ஆம்பருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவு வழங்கினார்.

இதற்கிடையே ஜீன் குடும்பம் சார்பில் நீதிமன்றம் வந்த அவரது இளைய சகோதரன், தனது சகோதரனை கொன்ற ஆம்பரை தான் மன்னித்து விட்டதாகவும், ஆம்பரை நீதிமன்றத்தில் வைத்து அரவணைத்து ஆறுதல் கூற அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு நீதிபதியின் அனுமதி கிடைத்ததை அடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆரத்தழுவிக்கொண்டனர்.

நீதிமன்றத்தில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவமானது, ஜீனின் குடும்பத்தினரையும் கண்கலங்க வைத்தது. முன்னதாக ஆம்பரின் சிறை தண்டனை 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

younger brother forgot the girl for killed his elder brother


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->