ஏமன் நாட்டு தாக்குதல் தொடர்பான விவகாரத்தில், கொந்தளிக்கும் அதிபர்.. பரபரப்பு அறிக்கை.!! - Seithipunal
Seithipunal


ஏமன் நாட்டில் இருக்கும் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படையினருக்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே கடந்த 2013 ஆம் வருடம் முதல் உள்நாட்டுப் போரானது தொடங்கி இன்றளவும் நீடித்து வருகிறது. 

அதிபருக்கு ஆதரவு படைகளுக்கும், சவுதி கூட்டுப்படைகளும் ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுத உதவியும், நிதி உதவியும் அளித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த உள்நாட்டுப் போரில் ஏமன் தலைநகர் சனாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வந்தது. இதே சமயத்தில் இந்தப் போரில் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 12 ஆயிரம் பேர் அப்பாவி பொதுமக்களும் ஆவார்கள்.

மேலும், போரினால் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். அங்குள்ள தலைநகர் சனாவில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மாரிப் இராணுவ முகாமில் மசூதி ஒன்று செயல்பட்டு வந்தது. 

இந்த மசூதியில் கடந்த சனிக்கிழமை அன்று தொழுகை நடைபெற்ற நேரத்தில், ஏராளமான படைவீரர்களின் தொழுகைக்காக வந்த நிலையில், இதனை அறிந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களை மசூதியை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் சுமார் 80 இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இவர்களின் உடல் கைப்பற்றப்பட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இந்த தாக்குதலுக்கு ஏமன் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமான தாக்குதல் ஆகும். இந்த தாக்குதல் மூலமாக அமைதி சமாதானத்தை ஒருபோதும் விரும்பவில்லை என்பதை சந்தேகமின்றி நிரூபிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yemen attack army officers died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->