9 கோடி பேர் பாதிப்பு.! 19 லட்சம் பேர் பலி.! இன்று காலை வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர். ரஷ்யா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் முதல்கட்டமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இருப்பினும், மருத்துவத் துறையினர், சுகாதாரத்துறையினர், அரசு ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் தன்னலமற்ற சேவையால் தற்போது உலகம் இந்த கொடிய கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வரும் நிலையில், பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரிணாம வளர்ச்சி அடைந்து, புதியவகை கொரோனா வைரஸ் பரவி வரும் செய்தி, உலக மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.

இதற்கிடையே, இன்று காலை வெளியான கொரோனா புள்ளி விவரத்தில், உலகம் முழுவதும் 9 கோடியே 12 லட்சத்து 82 ஆயிரத்து 274 பேர் இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதில், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 52 லட்சத்து 58 ஆயிரத்து 222 பேராக  உள்ளது.  கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 19 லட்சத்து 51 ஆயிரத்து 977 பேர் பலியாகியுள்ளனர். 

2 கோடியே 40 லட்சத்து 71 ஆயிரத்து 116 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 754 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொற்று பாதித்தவர்களில் அதிகளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world wide corona update jan 12


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->