2 கோடியைத் தாண்டிய கொரோனா! உலக நிலவரம் என்ன?! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா  வைரஸ் தற்போது வரை உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ளது. அந்த கொரோனாவால் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு கோடியை தாண்டிதுள்ளது. 7.3 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். 

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 47 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 52 லட்சத்தை நெருங்கிவிட்டது.

அந்நாட்டில், ஒரே நாளில் 525 பேர் பலியானதைத் தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1.65 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோரனாவால் 44,386 பேர் பலியாகியுள்ளனர். 14.8 இலட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world wide corona update


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->