வரலாற்றில் இன்று உலகத் தர நிர்ணய தினம்...!! - Seithipunal
Seithipunal


உலகத் தர நிர்ணய தினம் :

உலகத் தர நிர்ணய தினம்  என்பது ஆண்டுதோறும் அக்டோபர் 14ஆம் தேதி உலகளாவிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகில் மனிதனால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் மற்றும் தர நிர்ணயம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு புகுத்தவே சர்வதேச தர நிர்ணய நிறுவனம் ஐநுஊஇ ஐளுழு மற்றும் ஐவுரு அமைப்புகளும் ஒன்று சேர்ந்து 1970ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 14ஆம் தேதியை உலகத் தர நிர்ணய நாளாக அனுசரித்து வருகின்றன.

லாலா ஹர்தயாள் :

விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த படைப்பாளியுமான லாலா ஹர்தயாள் 1884ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.

அமெரிக்கா சென்ற இவர் சிலருடன் இணைந்து 'கதர்" என்ற பத்திரிக்கையை தொடங்கினார். மேலும் இவர்கள் ஒன்றிணைந்து அமெரிக்க பசிபிக் பிராந்திய ஹிந்த் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினர்.

இந்தியாவில் ஆங்கில அரசு செய்து வந்த கொடுமைகளை இப்பத்திரிக்கை உலகிற்கு வெளிப்படுத்தியது. உலகின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியது. இந்தியா விடுதலை பெற ஆயுதப் புரட்சிக்கான முனைப்புகளை மேற்கொண்டார்.

பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டிய லாலா ஹர்தயாள், 1939ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world standards day 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->