மண் வளம் காக்க உறுதி ஏற்போம்... இன்று மண் வள தினம்.! - Seithipunal
Seithipunal


உலக மண் வள தினம்:

உலகின் இயற்கைச் சூழலில் மண் வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை மையமாகக் கொண்டு உலகளாவிய ரீதியில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் டிசம்பர் 5ஆம் தேதியை உலக மண் தினமாகக் கடைபிடித்து வருகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம்:

சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம் டிசம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தன்னார்வ சேவையை உலகம் முழுவதும் செய்ய வேண்டும். நாடுகள் பாதிப்படையும்போது பொருளாதார உதவி மற்றும் உணவு உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபை 1985ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. தன்னார்வலர்களைப் பலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

முக்கிய நிகழ்வுகள்:

1950ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இந்திய ஆன்மீகவாதி ஸ்ரீ அரவிந்தர் மறைந்தார்.

1954ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தமிழ் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மறைந்தார்.

2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா மறைந்தார்.

1901ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உலகப் புகழ் பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world soil health day 2019


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->