உலகத்தின் முன்னாள் குள்ள மனிதர் இயற்கையை எய்தினார்.!! - Seithipunal
Seithipunal


ஒரு காலத்தில் 'உலகின் மிகக் குறுகிய நபர்' என்ற பட்டத்தை வகித்த நேபாள மனிதர் ஒருவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது 27 வயதில் போகர நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார்.

கஜேந்திர தாபா மகர் என்ற பெயரை கொண்ட இவர், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு போகாராவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நேற்று பிற்பகல் 3 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

மேலும், இவர் 67 செ.மீட்டர் உயரமும், 6 கிலோ எடையும் கொண்டு இருந்தார். உலகிலேயே மிகவும் குறுகிய மனிதராக மின்பஹதூர் ராணா என்பவரின் உதவியுடன், கின்னஸ் உலக சாதனையில் கடந்த 2010 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டார் .

இதனைத்தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டினை சார்ந்த ஜுன்ரி பாலாவிங் என்பவரை 59.93 சென்டிமீட்டர் உயரமும் 5 கிலோ எடையும் கொண்ட காரணத்தால், ஒருவருடம் கழித்து தனது பட்டத்தினை இழந்தார். இவர் கடந்த 1992 ஆம் வருடத்தில், அக்டோபர் 14 ஆம் தேதியன்று அங்குள்ள போகரா நகரில் பிறந்தார்.

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world shortest man died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->