வரலாற்றில் இன்று : உலக அறிவியல் தினம்.!! - Seithipunal
Seithipunal


உலக அறிவியல் தினம்:

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ஆம் தேதி அறிவியல் தினம், அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக கொண்டாடப்படுகிறது.

நமது சமூகத்தில் அறிவியலின் பங்கை உணர்த்தவும், அறிவியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும், நமது அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

இத்தினத்தில், சிறந்த ஆய்வுகளில் ஈடுபடும் இளம் விஞ்ஞானிகளுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.

முக்கிய நிகழ்வுகள்:

1483ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி கிறித்தவச் சீர்திருத்த இயக்கத் தலைவர் மார்ட்டின் லூதர் பிறந்தார்.

1970ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி சோவியத்தின் லூனா 17 விண்கலம் சந்திரனுக்கு லூனாகோட் என்ற தானியங்கி ஊர்தியை கொண்டு சென்றது.

2013ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி தமிழக எழுத்தாளர், புஷ்பா தங்கதுரை மறைந்தார்.

1697ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி பிரித்தானிய ஓவியர் வில்லியம் ஹோகார்த் பிறந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world science day 2019


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->