மிகப்பெரிய நிதி நெருக்கடி, அந்நிய செலவாணி பிரச்சனையில் பாகிஸ்தான் - உலக வங்கி.! - Seithipunal
Seithipunal


இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக உலக வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கடன்சுமைகளை அதிகளவு வைத்துள்ள முதல் 10 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்திற்கு பின்னர், கடன் சேவையை இடைநீக்கம் செய்யும் முயற்சிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 

சர்வதேச கடன் சுமை 2022 குறித்த புள்ளிவிபர அறிக்கையை உலக வங்கியானது சம்பீப்பதில் வெளியிட்டது. இதன்படி, அங்கோலா, வங்கதேசம், எத்தியோப்பியா, கானா, கென்யா, மங்கோலியா, நைஜீரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் உலகளாவிய கடன் சுமை அதிகம் கொண்ட நாடுகள் ஆகும். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கடுமையான நிதிச்சுமையில் தத்தளித்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டிற்கு மிகப்பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 1.9 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தை ஒப்பிடுகையில், இது 5 விழுக்காடு குறைவு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவை பொறுத்த வரையில் சீனாவின் வெளிநாட்டு கடன் சுமையும் அதிகரித்துள்ளது. கடந்த 2011 ஆம் வருடம் 4.7 பில்லியன் டாலராக இருந்த சீனாவின் நிதிச்சுமை, 2020 ஆம் வருடத்தில் 36.3 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Bank Declare Pakistan Facing Financial Crisis and Foreign Exchange Problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->