வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் நிதி உதவி - உலக வங்கி அறிவிப்பு - Seithipunal
Seithipunal


பருவநிலை மாறுபாடு மற்றும் சராசரியை விட அதிகமாக பெய்த பருவமழை காரணமாக பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்துள்ளன.

மேலும் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 32 மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 1200க்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் மறுகட்டமைப்பு, உணவு, இருப்பிடம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு மற்றும் அத்தியாவசிய அவசர தேவைகளுக்காக உலக வங்கி 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 10,000 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உலக வங்கியின் தெற்காசிய பகுதியின் தலைவர் மார்டின் ரைசர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே உலக வங்கி பாகிஸ்தானுக்கு வெள்ள நிவாரண நிதியாக 850 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 2 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World bank announces 2 billion flood relief to flood hit Pakistan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->