பெண்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்.! அதற்கு மட்டும் அனுமதி உண்டாம்.!  - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் பெண்கள் மட்டுமே வசித்து வரும் கிராமம் ஒன்று இருக்கின்றது. இந்த கிராமத்தில் அவர்கள் முழு சுதந்திரத்துடன் வாழ்கின்றார்கள். இங்கே தங்க ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கிராமம் கென்யாயாவின் சம்பூரூ மாநிலத்தில் இருக்கின்றது. 

உமோஜா என்ற இந்த கிராமத்தில் கடந்த காலத்தில் ஆண்களிடம் கொடுங்கோன்மைக்கு ஆளான பெண்கள் வந்து தங்கி இருக்கின்றனர். இந்த மக்கள் வன்முறைக்கு எதிரானவர்கள். இந்த மக்கள் ஆண்களைப்போல பெண்களை அடிபணிய வைப்பதை விரும்புவதில்லை. இங்கிருக்கும் பெண்கள் அனைவருமே வன்முறை மற்றும் கற்பழிப்புக்கு பலியாகி இருக்கின்றனர்.

இந்த கிராமத்தை அந்த பெண்களுக்கு சொர்க்கம் என்று அழைப்பதில் தவறே கிடையாது. இங்கு மாட்டுச்சாண கலவையில் இருந்து தயாரிக்கப்பட்ட கலவையைக் கொண்டு கட்டப்பட்ட குடிசைகள் கிராமம் முழுவதும் நிரம்பி இருக்கிறது. வீடுகளை சுற்றி புதர்கள் மற்றும் முள் வேலிகள் சூழ்ந்துள்ளது. 

பிரிட்டிஷ் ராணுவ பாலியல் பலாத்காரம் நடந்த பொழுது, அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்குவதற்காக இந்த வீடுகள் கட்டப்பட்டது. இங்கே வீட்டு வன்முறை, குழந்தை திருமணம், கற்பழிப்பு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் தான் தங்கி இருக்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு ஆரம்ப பள்ளி மற்றும் கலாச்சார மையம் இருக்கின்றது. கிராமத்திற்கு நலப் பணிகளைச் செய்வதற்காக நகைகளை உருவாக்கி அந்த மக்கள் விற்பனை செய்து பிழைக்கின்றனர். 

இங்கு வாழும் பெண்களின் வாழ்க்கையை மிகவும் கடினமாக இருந்தபோதிலும், இங்கு இருக்கும் பெண்கள் அதிக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். ஏனென்றால், இங்கே ஆண்கள் கொடுமையே இல்லை. இந்த கிராமத்துக்குள் ஆண்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், அங்கேயே தங்கி வாழ அவர்களுக்கு உரிமையில்லை. அந்த மக்களால் பெறப்பட்ட ஆண் குழந்தைகள் மட்டுமே கிராமத்தில் தங்க அனுமதி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wonderful village where only women live


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->