முட்டைக்கோஸால் அடித்த மாபெரும் அதிர்ஷ்டம், சற்றே நேரத்தில் கோடீஸ்வரியான இளம்பெண்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவை சேர்ந்தவர் வனேசா வார்ட்.இவர் சமீபத்தில் தனது தந்தையுடன் காய்கறிகள் மற்றும் சில பொருட்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கியுள்ளார்கள். மேலும் அந்தபெண் முட்டைகோஸ் ஒன்றையும் வாங்கியுள்ளார்.அதற்குள் கூப்பன் ஒன்று இருந்துள்ளது.

     

பின்னர் அந்த கூப்பனை வைத்து அந்த பெண் வீல் கேமை விளையாடியுள்ளார். இந்த விளையாட்டில் வனேசா ரூ. 1½ கோடி வென்றுள்ளார்.

இந்த சம்பவம் வனேசா மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்த பெண் கருத்து கூறும்போது, நான் இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பணத்தை வைத்து நான் டிஸ்னி லேண்ட் செல்லவிருக்கிறேன் என மிகுந்த உற்சாகத்துடன்  தெரிவித்துள்ளார்.
 

English Summary

women won 1and half crores by cabbage in america


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal