நடுவானில் பறந்த விமானத்தில் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்து பயணிகளை அதிர்ச்சியாக்கிய பெண்மணி.! - Seithipunal
Seithipunal


அட்லாண்டாவிற்கு அமெரிக்காவின் நியூயார்க் சைராகியூஸ் பகுதியில் இருந்து விமானம் ஒன்று நடுவானில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பெண் பயணி ஒருவர் தனது கையில் துணியை சுற்றி ஒரு குழந்தை போல வைத்திருந்துள்ளார். திடீரென்று யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்தத் துணியை விலக்கி அதில் வைத்திருந்த தன்னுடைய செல்லப் பிராணி பூனையை எடுத்து அவர் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.‌

ஆனால் அந்த பூனை பால் குடிக்க மறுத்து கத்த துவங்கியுள்ளது. நேரம் ஆக ஆக அந்த பூனை மிக அதிகமாக கதற ஆரம்பித்தவுடன் அருகில் இருந்த பயணிகள் அந்தப் பூனைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துங்கள் என்று தெரிவித்தனர். 

ஆனால் அந்த பெண் தொடர்ந்து பூனையை சமாதானப்படுத்தி தாய்ப்பால் கொடுக்க முயற்சித்துள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் விமானிகளிடம் இது குறித்து புகாரளிக்க அவர்கள் தரை கட்டுப்பாட்டு பிரிவினரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். 

அட்லாண்டா பகுதியில் விமானம் தரை இறங்கியவுடன் அந்த பெண் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த பெண்ணின் செயல் சக பயணிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women feed for cat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->