ஆப்கானிஸ்தான் : ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை அமைத்தபின், பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது. பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்க தடை, ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, விமானத்தில் ஆண்கள் துணையின்றி செல்ல தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால் பெண் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, முறையாக எந்த வித காரணமும் தெரிவிக்கப்படாமல் ஆப்கானிஸ்தான் அரசு, தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தடை விதிப்பதாக தாலிபன் அரசு அறிவித்திருந்தன. மேலும் அனைத்து விதமான தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டது.

தாலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆப்கன் அரசின் பொதுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பெண்கள் இனி ஆண் டாக்டர்களைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் தங்களின் நோய்களுக்கு பெண் மருத்துவர்களிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் இதனை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women banned to meet male doctors in Afghanistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->