கைகள் இல்லாமல், கால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண் .! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் அரிசோனாவை சேர்ந்த ஜெசிகா காக்ஸ் (வயது 30). இவர் ஒரு பெண் விமானி, ஜெசிகா பிறக்கும்போதே இரண்டு கைகள் இல்லாமல் பிறந்தவர். இதனால் அவரது பெற்றோர்கள் வேதனைக்கு உள்ளாகினர். 

ஆனால் வளர வளர அவரது அறிவும், ஆறுதலான பேசும், அவர்களை மகிழ்ச்சி உள்ளாக்கியது. சிறு வயதிலேயே உறவினர் ஒருவருடன் விமானத்தில், விமானி அருகே அமரும் வாய்ப்பு கிடைத்தது. அன்று முதல் விமானத்தின் மீதும் விமான பணியின் மீதும் ஜெசிக்காவுக்கு தீவிர ஈர்ப்பு வந்தது. 

பட்டப்படிப்பை முடித்த பின்னர் அதற்கான பயிற்சிகளையும் பெற விரும்பினார். சரியான பயிற்சியாளர், முறையான வழிமுறைகள் ஆகியவை கிடைக்கவே வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். பின்னர் கடும் பயிற்சி மேற்கொண்டு கடந்த 2008ஆம் ஆண்டு லைட் ஸ்போர்ட் விமானத்தை இயக்கும் சான்றிதழ் பெற்றார். 

இதனால் கைகள் இல்லாமல் விமானம் ஓட்டும் முதல் பெண் விமானி எனும் சாதனையை படைத்தார். விமானம் ஓட்டுவது மட்டுமல்லாமல் கராத்தே, கார் ஓட்டுதல், சமையல் என அனைத்து துறைகளையும் கற்று கற்றுக்கொண்டார். 

மேலும், யூடியூப் பக்கத்தின் மூலம் கைகள் இல்லாத மாற்று திறனாளிகளின் அன்றாட வேலைகளில் இருக்கும் பலுவை குறைத்து எளிதாக செய்ய பயிற்சி அளித்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman drive plane by legs


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->