டெல்டா வகை கொரோனா வைரஸ்.. இந்த நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும்.! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. பல நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். சில நாடுகளில் கொரோனாவின் 3-வது அலை ஏற்பட்டுள்ளது. 

உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனாவின் உருமாறிய வகையால் பாதிக்கப்பட்டு வருகிறது. அவை ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 172 நாடுகளில் ஆல்பா கொரோனா வைரஸ் பாதிப்புகளாலும், 120 நாடுகளில் பீட்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்புகளாலும், 72 நாடுகளில் காமா வகை கொரோனா வைரஸ் பாதிப்புகளாலும் மக்களை பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பு கடந்த வாரத்தை விட 11 நாடுகளில் அதிகம் என தெரிவித்துள்ளது.

இந்த 96 நாடுகளில் வரும் மாதங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who warning for 96 countries delta virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->