வாரத்திற்கு 55 மணிநேரம்.. அதிக வேலை பார்த்தால் பக்கவாதம், இதயநோய் ஏற்பட்டு உயிரிழப்பு.! டபிள்யூ.எச்.ஓ. எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


பணியிடத்தில் அதிக நேரம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உடல்நல பாதிப்பு மற்றும் மரணம் ஏற்படுவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. கடந்த 2000 - 2016 ஆம் வருடங்களில் உள்ள தரவுகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொண்ட நிலையில், நீண்ட நேரம் வேலை பார்த்து வந்த ஊழியர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதய நோய், உயிரிழப்பு போன்றவை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2016 ஆம் வருடம் நீண்ட நேர வேலை பார்த்து வந்தவர்களில் பக்கவாதம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 8 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்பு எண்ணிக்கை கடந்த 2000 ஆம் வருடத்தை விட 30 விழுக்காடு அதிகம் ஆகும். 

ஒரு வாரத்தில் 55 மணிநேரத்திற்கு அல்லது அதற்கும் அதிகமாக பணியாற்றி வருவது கடுமையான சுகாதார ஆபத்து என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், அதிக வேலை நேரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 72 விழுக்காடு பேர் ஆண்கள் என்றும், அவர்கள் நடுத்தர மற்றும் அதற்கு சற்றும் அதிக வயது கொண்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. இவர்கள் பணியில் இருக்கும் காலங்களை விட, வாழ்க்கையின் பிற்பகுதியில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சுமார் 194 நாடுகளில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில், வாரத்தில் 55 மணிநேரம் மற்றும் அதற்கு அதிகமாக பணியாற்றும் ஊழியர்களில் 35 விழுக்காடு பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், பிறருக்கு இதய நோய் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO Warn about Weekly above 55 Hrs Working Persons died 17 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->