கொரோனா குறைந்துள்ள நாடுகள் கவனம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் உள்ள 200 க்கும் மேற்பட்ட நாடுகளை புரட்டிபோட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு 62,084,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,451,167 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். 42,879,281 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 

துவக்கத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த ஐரோப்பிய நாடுகளில், தற்போது இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய துவங்கியதை தொடர்ந்து, முழு ஊரடங்கில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையுடன் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் குறைவாக உள்ள நாடுகள் மற்றும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைத்துக்கொண்டு இருக்கும் நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கேர்க்கோவ் தெரிவிக்கையில், " கொரோனா பரவல் குறைந்து வரும் நாடுகள் கவனமாக இருக்கவே வேண்டும். பல நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையில் எந்த விதமான அலட்சியமும் இருக்க கூடாது. கொரோனாவை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் தான் இருக்கிறது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO Warn about Corona Virus Low Registered Countries about Second Wave


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->