#Breaking: கினியாவில் கொடிய வைரஸான எபோலாவை உறுதி செய்தது உலக சுகாதார அமைப்பு..! உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 178,602,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரசால் 3,866,932 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 163,123,080 பேர் குணமடைந்துள்ளனர்.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு அலையாக உருமாறி பரவி வருகிறது. கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் என்ற ஆயுதத்துடன், தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு மக்கள் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர். 

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் எபோலா வைரஸ் தொற்று பரவி வருவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கினியாவில் எபோலா வைரஸ் பரவி வந்ததாகவும், தற்போது வரை 16 பேருக்கு எபோலா உறுதி செய்யப்பட்டு 12 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது. 

1976 ஆம் வருடம் சூடான் மற்றும் காங்கோ நாடுகளில் உறுதி செய்யப்பட்ட எபோலா வைரஸ் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பரவும் கொடிய வைரஸ் என்பதும், இதனால் கினியா, லைபீரியா போன்ற நாடுகளில் 28,616 பேருக்கு கடந்த காலங்களில் எபோலா உறுதி செய்யப்பட்டு 11,310 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO Confirm Ebola Virus Outbreak at South African Country Guinea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->