இந்தியாவுக்கு எதிராக வெள்ளை மாளிகை அறிக்கை! அதுவும் இதுக்காகவா?!  - Seithipunal
Seithipunal


போதைப் பொருட்களை உற்பத்தி செய்வதில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் முன்னிலையில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசி உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "இந்தியா ஆப்கானிஸ்தான், பெளிஸ் பஹாமாஸ், மியான்மர், கொலம்பியா, டொமினிக்கன் ரிபப்ளிக், கோஸ்டாரிகா, வெனிசுலா, பொலிவியா உள்ளிட்ட 20 நாடுகள் போதைப் பொருட்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

இதில் முக்கியமாக பொலிவியா, வெனிசுலா நாடுகள் கடந்த 12 மாதங்களில் போதைப் பொருள் உற்பத்திக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்தை மீறி நடந்து உள்ளது. இந்த போதைப் பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு படியாக, கொலம்பியா நாட்டில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றி வருகிறது.

பெரு நாட்டில் வழக்கத்திற்கு மாறாக கோகா, கொக்கையன் போதைப் பொருள் உற்பத்தி மிகவும் அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்கு அந்நாட்டுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருகிறது. மெக்ஸிகோ அரசும் தனது நாட்டில் போதைப்பொருள் உற்பத்திக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அமெரிக்க அதிபர் தெரிவித்ததாக, வெள்ளை மாளிகை வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

white house statement about drugs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->