இந்த ஐந்து நாடுகளுக்கு நீங்கள் சென்றால் இந்த சட்டத்தை கண்டிப்பாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.! இல்லையேல் உங்களுக்கு சிறை நிச்சயம்.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலத்தில் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாகவும்., சில சுற்றுலாவிற்காகவும்., கல்விக்காகவும் நாம் மேலை நாடுகளுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில்., பலர் ஒரு முறையாவது வெளிநாட்டிற்கு சென்று வர வேண்டும் என்ற எண்ணமானது இருக்கும். நமது நாட்டில் உள்ளது போன்றே அனைத்து நாடுகளிலும் சட்டங்கள் செயல்பட்டு வருகிறது. 

வெளிநாடுகளுக்கு செல்லும் போது அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களை நாம் அறிந்திருப்பது அவசியம். ஏனெனில் நமது நாட்டினை போன்று அனைத்து நாடுகளுக்கும் ஒரே சட்டங்கள் இல்லை., அந்தந்த நாட்டின் கலாச்சாரத்தை பொறுத்து சில சட்டங்களில் விலக்கும்., சில செயல்களுக்கு கடுமையான தண்டனையும் நடைமுறையில் உள்ளது. 

அந்த நாடுகளுக்கு செல்லும் போது நாம் அந்த சட்டத்தை கடைபிடிக்க தவறும் பட்சத்தில்., அந்நாட்டு சட்டத்தின் மூலமாக நாம் தண்டனை பெற முடியும். அந்த வகையில்., சில நாட்களில் உள்ள சட்டத்தை பற்றி நாம் இன்று தெரிந்துகொள்வோம். 

ஐஸ்லாந்து நாடு: 

ஐஸ்லாந்து நாட்டில் ஸ்ட்ரிப் க்ளெப் (Strip club) என்று அழைக்கப்படும் விடுதிகளில் பெண்களின் ஆபாச நடனங்கள் நடைபெற்று வந்தது. இந்த விடுதிக்கு தற்போது அந்நாட்டு அரசானது தடை விதித்து அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா: 

பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபிய நாடுகளில் காதலர் தினம் கொண்டாடுதல் மற்றும் காதலர் தினத்தன்று பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ சாக்லேட் மற்றும் பரிசுகள் போன்ற எந்த ஒரு பொருளும் கொடுப்பதோ அல்லது வாங்குவதோ கடுமையான தண்டனைக்கு வழிவகுக்கும். 

தாய்லாந்து: 

தாய்லாந்து நாட்டில் அவர்களின் பணத்தை யாரும் கால்களால் மிதிக்க கூடாது. அந்நாட்டு பணங்களில் நாட்டு அரசரின் முகமானது இருக்கும் என்பதால் பணத்தை கால்களால் மிதிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். 

கனடா: 

கனடா நாட்டில் உள்ள பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை கைகளினால் தூக்கி செல்ல வேண்டும். முன்பு நடைமுறையில் இருந்த (baby walkers) என்று அழைக்கப்படும் சக்கரங்கள் வைத்திருந்த குழந்தைகளின் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பெற்றோர்கள் கவனக்குறைவால் சில நேரத்தில் விபத்துகள் நேர்ந்ததால் இதற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் நபர்களுக்கு சுமார் 1 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

when you go to this country know that country rules and laws


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->