பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் மழைநீரால் பரவும் நோய்கள்.! ஒரே நாளில் 90000 பேருக்கு சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


பருவநிலை மாற்றம் காரணமாக பாகிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக பெய்த கனமழையால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்துள்ளன.

மேலும் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 32 மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 1200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் பல நாட்களாக தேங்கி நிற்கும் மழை நீரால் வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் மற்றும் கண் தொற்றுகள் பரவி வருகின்றன. அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் ஒரே நாளில் மட்டும் 90,000க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 92000 பேர் நீர் மூலம் பரவும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிந்து மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Water diseases start spread in Pakistan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->