கடவுளுக்கு என்ன ஆனது? எங்கே அவர்? நெஞ்சை உருக்கும் புகைப்படங்களுடன், கொந்தளித்துப்போன விஷ்ணு விஷால்!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் அனைவரும் நேற்றையதினம் கோலாகலமாக கொண்டாடினார்கள்.  ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில்  உள்ள கொழும்பு கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்திலும் நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலும்  சிறப்பு பிராத்தனை நடைபெற்றபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு நகரில் தி ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், தி கிங்க்ஸ் பெரி ஆகிய 3 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன.

 

அங்கு நடந்த குண்டு வெடிப்புகளில் இதுவரை மொத்தம் 290 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு நடந்த குண்டு வெடிப்புகளில் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலர் மயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதிலிருந்தும்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலும், குண்டுவெடிப்பிற்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் இலங்கை குண்டுவெடிப்புக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்  "சில மனிதர்களின் மனிதாபிமானமற்ற செயல் தொடர்கிறது. இலங்கை பற்றிய செய்தி சோகம் அளிக்கிறது" என கூறியுள்ளார். 

மேலும் மற்றொரு பதிவில் கடவுள்களின் புகைப்படங்களை பதிவிட்டு "கடவுளுக்கு என்ன ஆனது, எங்கே அவர்?, நாம் தான் அவரின் கோபத்திற்கு காரணமா?" என கேட்டுள்ளார்.
  

English Summary

vishnu vishal tweet about srilanka bomb plast


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal