இந்தியாவை மிரட்டியதாக கூறப்பட்ட 24 மணி நேரத்தில், இந்தியாவுக்கு ட்ரம்ப் ஏகபோக பாராட்டு!  - Seithipunal
Seithipunal


உலகத்தையே கொரோனா வைரஸானது உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் மருந்து என அமெரிக்க அறிவித்துள்ள ஹைட்ராக்ஸி குளூரோகுய்ன் மருந்தை அமெரிக்கா இந்தியாவிடம் கேட்டிருந்தது. ஆனால்  ஹைட்ராக்ஸி குளூரோகுய்ன் தடுப்பு மருந்து என அறிவிப்பு வெளியான போதே,  இந்தியா பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தி விட்டது. 

இந்த நிலையில் அமெரிக்கா, இந்தியா எங்களுக்கு  ஹைட்ராக்ஸி குளூரோகுய்ன் மருந்துகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என அதற்கான தடையை விலக்க வேண்டும் என இந்தியாவிடம் கோரிக்கை வைத்து இருந்தது. ஆனால் இந்திய அதனை ஏற்கவில்லை. இந்தநிலையில் செய்தியாளர் ஒருவர் இந்தியா ஒருவேளை அந்த மாத்திரையை அனுப்பவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு? எதிர்காலத்தில் அதற்கான பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் இயல்பாக தெரிவித்து இருந்தார். 

ஆனால் இந்த விவகாரமானது இந்தியாவில் மிகப்பெரிய பூதகரமானது. இந்தியாவை மிரட்டி விட்டார் என்று அனைத்து இடங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. நேற்று இவ்வாறான செய்திகள் வெளியாகி கொண்டிருக்க இன்று இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மிகப் பெரிய மனிதர் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களை  சந்தித்தபோது தெரிவிக்கையில், உயிர்காக்கும் மருந்தாக இருக்கும்  ஹைட்ராக்ஸி குளூரோகுய்ன் மாத்திரைகளை நாங்கள் இந்தியாவில் இருந்து 2.90 கோடி எண்ணிக்கை அளவில் வாங்கியிருக்கிறோம். இறக்குமதி செய்ய இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். 

நான் பிரதமர் மோடியிடம் பேசிய பொழுது நீங்கள் அந்த மருந்தை எங்களுக்கு வழங்கினால் நீங்கள் மிகப் பெரிய மனிதர் என நான் தெரிவித்து இருந்தேன், அவர் வழங்கி இருக்கிறார் உண்மையிலேயே மோடி மிகப் பெரிய மனிதர் தான். இந்தியாவுக்கும் அந்த மாத்திரை தேவைப்பட்டதால், அவர்கள் அந்த மாத்திரை ஏற்றுமதியை தடுத்து வைத்திருந்தார்கள். அதனால் அவர்கள் தடை விதித்து இருந்தார்கள். இந்த நிலையில் அவர் நமக்கு பெரிய மனதுடன் வழங்கி இருக்கிறார் என பாராட்டு தெரிவித்துள்ளார். 

உலக அளவில் இந்த மருந்தை தயாரிப்பதில் முதலிடம் வகிப்பது இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் உலக அளவில் பயன்படுத்தப்படும் 70% இந்த மருந்தினை இந்தியாவிலிருந்து தான் ஏற்றுமதி செய்கிறோம் என இந்திய மருந்து தயாரிப்பாளர் கூட்டமைப்பு ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவை மிரட்டினார் என்று அறிவித்த 24 மணி நேரத்திற்குள் பிரதமர் மோடியை ட்ரம்ப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US president trump praise to India


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->