அழகாக இல்லை என்று கூறி பணி வாய்ப்பு மறுப்பு... பெண் செய்த பரபரப்பு செயலால் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


பெண்ணொருவர் வேலைக்காக விண்ணப்பித்து இருந்த நிலையில், அவர் அழகாக இல்லை என்று கூறி அவருக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள ஆபர்ன் ஹில்ஸ் மிச்சிகன் (Auburn Hills Michigan)  பெண்மணி கிரேசி லோரன்ஸ் (Gracie Lorincz) வயது 21. இவர் மிக்சிகனில் இருக்கும் அவோ லென் என்ற நிறுவனத்தில் காலியாக இருந்த பணியிடத்திற்கு இணையவழியில் பணி வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். இவருக்கு கடையின் உரிமையாளர் கணவரான சக் டிக்ரெண்டெல் (Chuck DeGrendel) என்பவர் நீங்கள் அழகாக இல்லை என்பதால் உங்களது விண்ணப்பத்தை நிராகரித்து இருக்கிறோம் என பதிலளித்துள்ளார். 

இது தொடர்பான மின்னஞ்சல் கிரேஸிக்கு கிடைக்கப்பெறவே, அவர் தனது டிக் டாக் வீடியோவில் தனது பணி மறுப்புக்காக தனது அழகு காரணமாக கூறப்பட்டுள்ளது என பதிவு செய்துள்ளார். இது தொடர்பான பதிவு அங்குள்ள டிக் டாக் வட்டாரங்களில் வைரலாக பரவி பெரும் கண்டனத்தை சந்தித்தது. இதனை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து இருந்தனர். மேலும், சக் டிக்ரெண்டெளுக்கு கடுமையான கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியது. இதனால் சக் டிக்ரெண்டல் தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். 

விற்பனை பிரதிநிதி பணியிடத்திற்காக பெண்மணி வினைப்பது இருந்த நிலையில், அழகை மேற்கொள்காண்பித்து அவரது பணி நிராகரிப்பு செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை சந்தித்தது. இது தொடர்பாக க்ரேஸின் தாயார் ஹீதர் லோரன்ஸ் தெரிவிக்கையில், எனது மகள் பணிக்காக விண்ணப்பித்து, பதில் பெற்றதும் மிகவும் மனதுடைந்து போனார். அவர் ஒரு குழந்தை போன்றவர். எளிமையான குணம் கொண்டவர். அவருக்கு பெரும் சங்கடமான சூழலை அவளது பணித்தேடல் உருவாகிவிட்டது. 

இந்த சர்ச்சைகள் தொடர்பாக பதிலளித்த  சக் டிக்ரெண்டெல், " நான் எனது மனைவி லாராவுக்கு தகவலை தெரிவிக்க மின்னஞ்சல் செய்தேன். ஆனால், அது தவறுதலாக கிரேஸிக்கு சென்றுவிட்டது. அவர் அழகானவர் இல்லை என்று தெரிவிக்க முன்வரவில்லை. விற்பனை பிரதிநி பணியிடத்திற்கு அவர் சரியாக இருக்க மாட்டார் என்பதை போன்ற கருத்தை தெரிவித்தேன். அது தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தவறான புரிதலுக்காக நான் வருந்துகிறேன். பெண்ணின் மனது வேதனைப்பட்டதாக செய்தி அறிந்ததும் நானும் வருத்தமுற்றேன். மன்னிப்பு கேட்கிறேன் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US Michigan Auburn Hills 21 Aged Gracie Lorincz Job Decline due to Beauty


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->