ரஷ்யாவின் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பாவில் அமெரிக்கப் படைகள் அதிகரிப்பு.! ஜோ பைடன்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவின் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பாவில் அமெரிக்கப் படைகளை அதிகரிக்க உள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உக்ரைன் மீதான தொடர் தாக்குதலை கண்டித்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் ரஷ்யா பொருளாதார தடைகளை விதித்திருந்தன.

மேலும் உக்ரைனுக்கு உதவியாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் பொருளாதார உதவிகள் ஆயுத உதவியும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் உக்ரைனுக்கு உதவி வரும் நாடுகளுக்கு ரஷ்யாவின் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பாவில் அமெரிக்க படைகளை அதிகரித்து உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க்கை ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் சந்தித்து பேசிய ஜோ பைடன் நேட்டோ படைகளின் பலத்தை மேலும் அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா போலந்தில் ஒரு நிரந்தர தலைமையகத்தை அமைக்க உள்ளதாகவும், ஜெர்மன், பிரிட்டன் மற்றும் இத்தாலி நாடுகளுக்கு கூடுதல் படை அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Us increase troops in Europe due to Russia threats


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->