கொரோனா அச்சத்தில் பயிர்களை பிரித்து மேய்ந்த வெட்டுக்கிளிகள்... பட்டினியால் இறப்பு என எச்சரிக்கை விடுத்த ஐநா.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதுமே கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவு அதிகரித்துள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பபட்டும், பல்லாயிரக்கணக்கில் ஏற்படும் உயிரிழப்பு பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. 

இந்த நிலையில், ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளி படையெடுப்பின் காரணமாக மக்கள் உணவின்றி உயிர் இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கில் படை எடுத்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாகவே சுமார் 5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த உணவுப் பொருட்களை அழித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும், தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தற்போது இருப்பதை விட 20 மடங்கு இன்னும் வரும் நாட்களில் அதிகம் ஆகலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி பசியால் பட்டினி கிடக்கும் அவலம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UNO warn and fear about Ethiopia gross hopper eats food


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->