துபாய், சவூதி உட்பட அரபு நாடுகளுக்கு வருபவர்கள் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் - யூ.ஏ.இ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 214-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 178,955,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 3,875,504 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 163,479,618 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

ஜூன் 23 ஆம் தேதி முதல் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை ஐக்கிய அரபு அமீரகம் தொடங்குகிறது. ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்பவர்கள் தடுப்பூசியின் இரண்டு டோசையும் செலுத்திக் கொள்ள வேண்டும். 

அதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். நாட்டிற்குள் வருவதற்கு முன்னதாக 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து, அதில் நெகட்டிவ் என்று வந்திருக்க வேண்டும் உட்பட ஆறு விதிகளின் அடிப்படையில், அவர்கள் நாட்டுக்குள் அனுமதி செய்யப்படுவார்கள் என துபாய் அரசு அறிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

United Arab Emirates Govt Announce Arab Travelers Should Complete 2 Dose Vaccination


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->