100 வினாடிக்கு ஒருவர் வீதம் எச்.ஐ.வி., எய்ட்ஸால் பாதிப்பு.. யுனிசெப் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


ஐ.நாவின் சர்வதேச குழந்தைகள் அவசரகால நிதி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வருடத்தில் ஒவ்வொரு 100 வினாடிக்கு ஒருமுறை குழந்தை அல்லது 20 வயதிற்கு உட்பட்ட இளைஞருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதனால், எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி, பாதிக்கப்பட்ட 3.2 இலட்சம் குழந்தைகள் பலியாகியுள்ளனர். எய்ட்ஸ் நோய்க்கு 1.1 இலட்சம் குழந்தைகள் பலியாகியுள்ளனர். கடந்த 2019 ஆம் வருடத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பு முயற்சிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறைவாக இருந்துள்ளது. 

உலகம் முழுவதும் 50 விழுக்காடு குழந்தைகளுக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் கிடைக்கவில்லை " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குனர் கூறுகையில், குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UNICEF Warn about HIV and AIDS Death Children


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->