இலங்கையில் தீவிரமடையும் உணவு பஞ்சம்.! ஐ.நா எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தால் கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் வரும் காலத்தில் உணவு பஞ்சம் மோசமாக வாய்ப்புள்ளதாக உலக உணவுத் திட்ட அமைப்பு மற்றும் ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வில், இரண்டு மோசமான அறுவடை காலங்களால் மொத்த உற்பத்தி 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும், அந்நிய செலாவணி பற்றாக்குறையால் தானிய இறக்குமதி வெகுமளவு குறைந்ததாகவும், ஆய்வின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 63 லட்சம் பேர் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் முதல் அடுத்த வருடம் பிப்ரவரி 2023 வரையிலான காலகட்டத்தில் நிலைமை மோசமடைய கூடும் என்று உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 30% பேர் வேளாண் துறையை நம்பியுள்ள நிலையில், அவர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தினால், வேளாண்துறையை மீட்டெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN warns food shortage will be worsened in srilanka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->