உக்ரைன் ராணுவம் பெலாரஸ் மீது வான்வழி தாக்குதல்.! அதிபர் லுகாஷென்கோ தகவல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் ராணுவம் பெலாரஸ் மீது வான்வழி தாக்குதல் பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய மற்றும் ஐரோப்பா நாடுகள் உதவி வருகின்றன.

மேலும் ரஷ்யாவின் அண்டை நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் நிலையில், ரஷ்யா ஆதரவு நிலைப்பாடு காரணமாக பெலாரஸ் மீது உக்ரைன் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணைகளை பெலாரஸ் ராணுவம் பேன்ட்சர் வான்வழி தடுப்பு சாதனங்களைக் கொண்டு இடைமறைத்து அழித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்று நாட்களுக்கு முன்பு இதே போல் தங்கள் ராணுவ நிலைகளை குறிவைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், இந்த தாக்குதல் ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாகவும், அதிபர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine attack on Belarus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->