நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தின் பாக்லுங் மாவட்டத்தின் அதிகாரிசௌரைச் சுற்றி உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:23 மணியளவில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 02:07 மணி அளவில் 5.3 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பாக்லுங் மாவட்டத்தின் குங்காவைச் சுற்றி தாக்கியதாக நேபாளத்தின் தேசிய நிலநடுக்கம் மையம் செய்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த நவம்பர் 9ஆம் தேதி மேற்கு நேபாளத்தின் தொலைதூர மலைப் பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two Earthquakes of magnitude strike Baglung nepal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->